Kathir News
Begin typing your search above and press return to search.

உ.பி'யில் மதக் கலவரங்கள் இல்லை - சாட்டையை சுழற்றும் யோகி!

உ.பியில் மதக் கலவரங்கள் இல்லை - சாட்டையை சுழற்றும் யோகி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Sept 2022 8:24 AM IST

தேசிய குற்ற ஆவண காப்பகம், 2021-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, உ.பி.யில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டும் நடைபெற்றுள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, உ.பி.யில் மதக் கலவரம் இல்லை என்ற நிலையாக உள்ளது. மதக் கலவரங்கள் மீதான அறிக்கையில், மகராஷ்டிராவில் மிக அதிகமாக 378 நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 77, பிஹார் 51, ஹரியாணா 40 என உள்ளன.

இதனைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் யோகி, காவல் துறை அதிகாரிகளிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்கள், கொலை, ஆள்கடத்தல் குற்றங்களும் குறைந்துள்ளன.

உ.பி.யின் குற்றப் பதிவேட்டின் மீது ட்விட்டரில் 20,000 பேர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இவை, சமூக வலைதளங்களின் 25.88 மில்லியன் பேரை சென்றடைந்து, இதன் ஹேஷ்டேகை 301 மில்லியன் பார்த்துள்ளனர்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம் பல ஆண்டுகளாகவே மதக் கலவரத்திற்கு பெயர்போனதாக உள்ளது. முசாபர்நகர், அலிகர், மீரட், வாரணாசி, முராதாபாத், புலந்த்ஷெஹர் போன்ற நகரங்கள் அடிக்கடி மதக் கலவரம் நடைபெறும் பட்டியலில் உள்ளன.

பாஜக ஆளும் உ.பி.யில் முதல்வராக யோகி அமர்ந்தது முதல் அதன் காவல் துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. புதிதாக 53,586 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உ.பி. காவல்துறையின் 65,568 அலுவலர்களுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உ.பி. காவல் துறையால் ரூ.129.4 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Input From: Hindu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News