இனி உலக அரங்கில் இந்தியா வேற லெவல் !
The domestic production and imports of other drugs required for the management of COVID-19 namely dexamethasone, methylprednisolone, paracetamol etc. was monitored regularly
By : Muruganandham
அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. புதிய உற்பத்தி நிலையங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிப்பது, உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க உதவுவது, இறக்குமதியாளர்களுக்கு அதிகளவு மருந்துகள் கிடைக்க உதுவுவது ஆகியவை இவற்றில் அடங்கும்.
சில காலத்திற்கு ஏற்றுமதிகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் மற்றும் அம்போடெரிசின் பி ஆகிய மருந்துகள் சம அளவில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் மற்றும் அம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளின் ஒதுக்கிடு முறையே ஏப்ரல் 21, ஏப்ரல் 27 மற்றும் மே 11, ஆகிய நாட்களில் தொடங்கின. இம்மருந்துகள் போதிய அளவில் கிடைத்ததை அடுத்து, ரெம்டெசிவிர் மற்றும் அம்போடெரிசின் பி விநியோகம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
போலி மருந்துகள் குறித்த புகார்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் பெற்றப்படுகின்றன. புகார்கள் வந்தடைந்தவுடன், மாநில மருந்து கட்டுப்பாட்டாளருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வர்த்தகத் துறை எடுத்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் உள்ள திட்டங்கள், சந்தை அணுகல் முன்னெடுப்புத் திட்டம், மாவட்ட ஏற்றுமதி மையங்களை அமைத்தல், போக்குவரத்து மற்றும் சந்தை உதவித் திட்டம் ஆகியவை இவற்றில் அடங்கும்.
மருந்து செயல்முறைகள் மற்றும் உயிரியல் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பை பொருத்த அளவில் 2018-19-ம் ஆண்டு 14389 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2019-20-ம் ஆண்டு 15941 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2020-21-ம் ஆண்டு 19042 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.
செயல்மிகு மருந்து பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு, இறக்குமதிகளை விட அதிகமாக உள்ளது. 2020-21-ம் ஆண்டு 3,90,467 மெட்ரிக் டன் அளவில் இறக்குமதியும், 3,24,331 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதியும் இருந்துள்ளது.