முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, பாதி தடுப்பூசி போட்டவர்களை விட அதிகம் - கொரோனா தடுப்பில் அசத்தும் இந்தியா!
Number of Fully Vaccinated individuals surpasses the Partially Vaccinated eligible population for the first time
By : Muruganandham
Har Ghar Dastakஎனப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பூசி இயக்கத்தின் முடிவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அக்டோபர் 21-ந் தேதி 100 கோடி டோஸ்களை இயக்கம் கடந்தது. அதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஹர் கர் தஸ்தக் இயக்கத்திற்கு நவம்பர் 3-ந் தேதி அழைப்பு விடுத்தார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களை ஊக்குவித்து வீடு வீடாக சென்று அதனை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்பது அதன் பொருளாகும்.
நாட்டில் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை இல்லையென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களை வலியுறுத்தியுள்ள அவர், இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளுமாறும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரையும், சமுதாயத்தினரையும் ஊக்கப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகுதியுள்ள நபர்களை விட முதன் முறையாக அதிகரித்துள்ளது.
'ஜன் – பாகிதாரி' என்னும் பிரதமரின் தொலைநோக்கு, "முழுமையான அரசு அணுகுமுறை", அரசு மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'ஹர் கர் தஸ்தக்' இயக்கம் ஆகியவற்றின் காரணமாகவே இந்தச் சாதனை சாத்தியமாகி உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.