Kathir News
Begin typing your search above and press return to search.

தகாத உறவால் கன்னியாஸ்திரி கொலை.. 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு தண்டனை.!

தகாத உறவால் கன்னியாஸ்திரி கொலை.. 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு தண்டனை.!

தகாத உறவால் கன்னியாஸ்திரி கொலை.. 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு தண்டனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Dec 2020 3:09 PM GMT

கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சிபிஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா 19, இவர் அங்குள்ள செயின்ட் பயன் கான்வென்டில் தங்கியிருந்த சமயத்தில் 1992ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். இதனை விசாரித்த போலீசார், அவர் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ., விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் தனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்களும் தற்கொலை என்றே தெரிவித்தனர். 2வதாக நியமிக்கப்பட்ட சிபிஐ., வசாரணையில் அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. 3வது குழு விசாரித்தத்தில் இந்த கொலையை செய்தவர்கள் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பாதிரியார்களுக்கும், கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்ததை, அபயா நேரில் பார்த்துள்ளார். எங்கே அவர் வெளியே சொல்லிவிடுவாரோ என பயந்து, அபயாவை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் உடலை வீசி உள்ளனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என வழக்கை விசாரித்த சிபிஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

ஒரு சமுதாயத்தில் முன்னுதாரணமாக இருக்கும் பாதிரியாரே இது போன்ற குற்றச்செயல்களில் செய்யும்போது, அவர்களின் சார்ந்த சமுதாயத்தினர் அவரிடம் இருந்து தீய பழக்கங்களைதான் கற்றுக்கொள்வார்கள். இது போன்றவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News