Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி போட்டால் உயிரிழந்து விடுவோம்.. வீடுகளை காலி செய்த பழங்குடியின கிராம மக்கள்.!

ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டத்தில் உள்ளது சம்பகனா என்ற கிராமம். அங்கு ‘காந்த் என்ற பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து தங்களின் வீடுகளை காலி செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டால் உயிரிழந்து விடுவோம்.. வீடுகளை காலி செய்த பழங்குடியின கிராம மக்கள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2021 6:29 PM IST

ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டத்தில் உள்ளது சம்பகனா என்ற கிராமம். அங்கு 'காந்த் என்ற பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து தங்களின் வீடுகளை காலி செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கியது. இதன் பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானதை மத்திய அரசு விரைவுப்படுத்தியது. இதனால் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.





இந்நிலையில், பழங்குடியின கிராமங்கள் அதிகமாக நிறைந்த மாநிலம் ஒடிசா. அங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக மருத்துவ குழுக்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். இதுவரை 45 வயதிற்கு மேற்பட்ட 54,34,038 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 11,22,935 பேருக்கு ௨ வது டோஸ் போடப்பட்டுள்ளது. அதே போன்று 18 முதல் 44 வயதுடைய 9,68,188 பேர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சம்பகனா என்ற பழங்குடியின கிராமத்திற்கு மருத்துவ குழுவினர் சென்றனர். அப்போது அங்கு இருந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களில் தலைமறைவாகிவிட்டனர்.




இது பற்றி மருத்துவர் சைலஜா கூறுகையில், "சம்பகனா கிராமத்தில் 'காந்த்' பழங்குடியினர் மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்காக 100 டோஸ்களை எடுத்து சென்றோம். ஆனால் நாங்கள் வருவதை அறிந்த கிராம மக்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

தடுப்பூசி போடாமல் ஏன் தலைமறைவாகி விட்டனர் என்று விசாரித்த போது, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 2 மணி நேரத்தில் இறந்து விடுவோம் என்று வீடியோ ஒன்று பரவியுள்ளது. இதனை பார்த்த கிராம மக்களும் தங்களுக்கும் இதே நிலைமை வந்துவிடும் என்றுதான் மருத்துவர்கள் வருவதை பார்த்து தலைமறைவாகிவிட்டனர் என்றார்.

தடுப்பூசி குறித்து தவறான வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறினார். இதே போன்று நாட்டில் பல்வேறு கிராமங்களில் மக்கள் பயந்து வருகின்றனர் அவர்களின் பயத்தை போக்கி அனைவருக்கும் தொற்று இல்லா நாடாக மாற்ற பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News