Kathir News
Begin typing your search above and press return to search.

அடிக்கடி எரியும் எலெக்ட்ரிக் பைக்: மத்திய அரசு எச்சரிக்கையால் ஓலா சி.இ.ஓ. விளக்கம்!

அடிக்கடி எரியும் எலெக்ட்ரிக் பைக்: மத்திய அரசு எச்சரிக்கையால் ஓலா சி.இ.ஓ. விளக்கம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  26 April 2022 12:29 PM GMT

இந்தியாவில் ஒரு சில வாரங்களாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் எலெக்ட்ரிக் பைக் விற்பனை மந்தமானது.

இதனால் எலெக்ட்ரிக் நிறுவன உரிமையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் அலட்சியமாக நடந்து கொள்ளும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்தது. அது மட்டுமின்றி உடனடியாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளை ரிகால் செய்து அதனை சரி செய்து தரும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசு எச்சரிக்கைக்கு பின்னர் ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் பதில் கூறியுள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களில் சில பிரச்சனைகள் உண்டு. அதனை இல்லை என்று சொல்ல மாட்டேன். மென்பொருள் சார்ந்த பிரச்சனை என்பதால் விரைவில் சரிசெய்ய முடியும். இவ்வாறு அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Malaimalar

Image Courtesy: ABP

Next Story
கதிர் தொகுப்பு
Trending News