Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் G20 தலைவர் பதவி பெருமை கூறியது - மக்களவையில் சபாநாயகர் புகழாரம்!

இந்தியாவில் G-20 தலைவர் பதவி என்பது பெருமைக்குரிய ஒரு விஷயம்.

இந்தியாவின் G20 தலைவர் பதவி பெருமை கூறியது - மக்களவையில் சபாநாயகர் புகழாரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Dec 2022 5:14 AM GMT

உலக அளவில் வளர்ந்து மற்றும் வளரும் நாடு நாடுகளைக் கொண்ட ஜி 20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்க தொடங்கியது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். இது பெருமைக்குரிய அம்சம் என நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் ஓம் பிரகா தெரிவித்திருக்கிறார். காலையில் அவை கூடியதும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நாட்டு மக்களுக்கும் அவர் தன்னுடைய வாழ்த்து செய்திகளை குறித்து பேசினார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், 2023 ஆம் ஆண்டு ஜி20 நாடுகளின் தலைவர் பங்கேற்கும் உச்சி மாநாடு இந்தியா நடத்தும் பொழுது, நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடும் இந்திய நாடாளுமன்ற தலைமையின் கீழ் நடக்கும். இந்த ராஜதந்திர வரலாற்றில் இந்த மாநாடு ஒரு முக்கிய அதிக அத்தியாயமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த மாநாட்டின் போது நமது வளமான பன்முக கலாச்சார பாரம்பரியம் மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் சக்தி இந்திய உலகிற்கு முன்வைக்கும் எனக் கூறிய ஓம் பிர்லா அவர்கள், ஒட்டுமொத்த உலகிற்கும் சிறந்த தலைமையை வெளிப்படுத்தும் என்றும் கூறுகிறார். இந்த பெருமையும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News