பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாட்டத்தை பாதிக்குமா புதிய கொரோனா?
பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்குமா? புதிய கொரோனா வைரஸ் தொற்று.
By : Bharathi Latha
உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை இந்தியாவில் அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார துறை அமைச்சர் கூறுகையில், மீண்டும் கொரோனா வைரஸ் தலை தூக்கி உள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
உலக அளவில் தினமும் சராசரியாக 5.87 லட்சம் பெயர் புதிய கொரோனா பாதிப்புகள் உடன் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் இது 153 ஆக உள்ளது. நாட்டின் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்குவதை ஒட்டி கொரோனா பரவல் கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு தற்பொழுது அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மீண்டும் முக கவசங்கள் அணிவது, கைகளை தூய்மையாக பேணுவது, சமூக இடைவெளி உள்ளிட்ட தொற்று தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் விமானங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடங்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Hindu