ஆந்திரா, சண்டிகருக்கு பரவிய ஒமைக்ரான் வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு 35 ஆக உயர்வு!
தென்னாப்பிராக்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாறி ஒமைக்ரான் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் குறைந்த நாட்களில் உலக நாடுகளை மீண்டும் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதனால் அனைத்து நாடுகளும் விமான நிலையத்தில் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னரே வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்கு அனுமதித்து வந்தனர்.
By : Thangavelu

இதனிடையே, இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் கடந்த 2ம் தேதி நுழைந்தது. முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு அந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதே போன்று நேற்று வரை 33 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 பேர் பாதிப்படைந்தனர். ராஜஸ்தானில் 9, குஜராத் 3, கர்நாடகா 2, டெல்லி 2 என இந்த வகையிலான வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.
இந்நிலையில், ஒமைக்ரான வைரஸ் முதன் முறையாக ஆந்திரா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினத்துக்கு வந்த 34 வயது மதிக்கத்தக்கவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று சண்டிகரிலும் 20 வயது மதிக்கத்தக்க நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 35 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy:Hindustan Times