Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் மத்திய அரசு - உருமாறிய கொரோனா தொடர்பாக வெளியான தகவல்!

உருமாறிய கொரோனா ஒமிக்ரான் கண்காணிப்பு குறித்து தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் மத்திய அரசு - உருமாறிய கொரோனா தொடர்பாக  வெளியான தகவல்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  5 Dec 2021 8:48 AM IST

உருமாறிய கொரோனா ஒமிக்ரான் கண்காணிப்புக் குறித்து தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,சர்வதேச பயணிகளின் கண்காணிப்பை விரிவுப்படுத்தவும், தீவிரமாக பரவிவரும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நோய்தொற்று ஏற்பட்ட தனிநபர்கள் உடனான இதர நபர்களின் தொடர்பை முறையாக கண்டறியவும் பதினான்கு நாட்களுக்கு கண்காணிப்பில் வைத்திருக்கவும், நோய்தொற்று உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை உடனடியாக INSACOG பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பிவைக்கவும்,சுகாதார கட்டமைப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிக முக்கிய கவனம் செலுத்தவும், அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

டிசம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைந்த 30 நாட்களில், தமிழ்நாட்டில் 23,764 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் 37.63 சதவீதமும், திருவள்ளூரில் 14.24 சதவீதமும், சென்னையில் 16.09 சதவீதமும் தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளனர்.

இந்த சூழலில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்பைத் தடுக்கவும், பரிசோதனை தொடர்பு கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய உத்திகள் மூலமாக நிலையை கட்டுக்குள் வைத்திருக்கத், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு எதிரான ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வழங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News