Kathir News
Begin typing your search above and press return to search.

ஓரே தேசம் ..ஒரே தேர்தல் முறை: சட்ட திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வரவேண்டும் - தேசீய சிந்தனை வாதிகள் வலியுறுத்தல்.!

ஓரே தேசம் ..ஒரே தேர்தல் முறை: சட்ட திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வரவேண்டும் - தேசீய சிந்தனை வாதிகள் வலியுறுத்தல்.!

ஓரே தேசம் ..ஒரே தேர்தல் முறை: சட்ட திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வரவேண்டும் - தேசீய சிந்தனை வாதிகள் வலியுறுத்தல்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  5 Dec 2020 7:30 AM GMT

நாடு முழுவதும் அவசர சட்டம் பிறப்பித்த காலத்தில் இந்திரா காந்தி 45 ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கடி எதிர் கட்சிகள் ஆளும் மாநில ஆட்சிகளை கலைத்தார்.இதனால் ஒரே சமயத்தில் மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்கள் இடையே சீர்குலைந்தன.

இந்த முறையை தற்போது உரிய சட்ட திருத்தங்களுடன் மாற்ற வேண்டியது நம் தேசத்துக்கு மிகவும் அவசியம் என பொதுநலன் நோக்குனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தும் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' திட்டம் மூலம் தேர்தல் செலவுகள் பல கோடிகள் குறையும்; மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான சரியான ஆட்சி உத்தரவாதத்தை பெறுவதற்கு அதற்கான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம்” என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: சுதந்திரத்திற்கு பின் 1951 முதல் தேர்தல்கள் நடக்கின்றன. 1951, 1957, 1962 மற்றும் 1967 என நான்கு முறை லோக்சபாவிற்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் நடந்தன.

இதன் மூலம தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சியினர் செய்யும் செலவினங்கள் ஏற்கனவே வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில் தற்போது தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் ஒவ்வாரு ஐந்தாண்டிற்கும் ரூ.10 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகிறது. இதுதவிர ரூ.30 முதல் 35 ஆயிரம் கோடியை கட்சியினர் செலவிடுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரிக்கின்றன.

1996 முதல் 1999க்குள் நான்கு லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. இதற்காக தான் 1999ல் ஜீவன் ரெட்டி என்பவர் சட்ட கமிஷன் அமைத்து ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதை பரிசீலிக்கலாம் என வலியுறுத்தினார்.

அதன் பின் அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 1967 வரை ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்தது. எமர்ஜென்சி நேரத்தில் பல மாநில ஆட்சிகளை அப்போதைய பிரதமர் இந்திரா கலைத்தார். அதன் பின் மாநிலங்களில் நடக்கும் தேர்தல் முறை மாறின. இதை ஒழுங்குபடுத்த ஒரே தேசம் ஒரே தேர்தல் முறை சரியான தீர்வாக இருக்கும்.

ஆனால் அதில் உள்ள சிக்கல்களை களைய அரசியல் அமைப்பு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அடுத்த நுாறு ஆண்டுகளுக்கு தேவையான சீர்திருத்தங்கள் தேர்தலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் தேசிய சிந்தனை வளரும் என்றாலும் சுய லாபத்திற்காக மாநில கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கும்.

ஏனென்றால் 2014 வரை 30 ஆண்டுகள் மாநில கட்சிகள் மூலம் தான் மத்தியில் ஆட்சி அமைந்தன. சட்டசபை தேர்தல்களிலும் தேசிய சிந்தனையுடன் வாக்களிக்க துவங்கினால் சுயநலம் மிக்க மாநில கட்சிகள் காணாமல் போய் விடும். ஆனாலும் ஆக்கப்பூர்வமான இந்த மாற்றத்தை வரவேற்பது கட்டாயம், என பிரபல அரசியல் விமர்சகர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News