பிரதமர் மோடியின் ஒரே நாடு, ஒரே சீருடை திட்டம்: முக்கிய அம்சம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வரவுள்ள ஒரே நாடு, ஒரே சீருடை திட்டதின் முக்கிய அம்சங்கள்.
By : Bharathi Latha
பிரதமர் மோடியின் உரை:
அரியானா மாநிலம் சூரஜ் கொண்டு நகரில் சிந்தனை அமர்வு மாநாடு என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சர்களின் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் இரண்டாவது நாளான நேற்று நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அமைச்சர்களுடன் உரையாடினார். குறிப்பாக அவர் கூறுகையில், அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சட்டமும் ஒழுங்கும் மாநிலத்தின் பொறுப்பாகும். இருந்த பொழுதிலும் அவை நாட்டின் ஒத்துழைப்புடன் ஒருமைப்பாட்டுடன் தொடர்பு உடையது. ஒவ்வொரு மாநிலமும்,ஒன்றியிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள வேண்டும். உத்வேகம் பெற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். இது அரசியல் அமைப்பு உணர்வு, இது நாட்டு மக்களிடம் நாம் காட்டும் பொறுப்புணர்ச்சியும் கூட.,
இந்த நிகழ்ச்சியின் போது ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற ஒரு யோசனை உங்கள் முன் வைக்கிறேன். நான் எதையும் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இது உடனே நடக்கலாம். ஐந்து, 50 அல்லது 100 வருடங்களில் நடக்கலாம் சற்று சிந்தித்துப் பாருங்கள். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை கொடுக்கும். அனைத்து மாநிலத்திலும் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கிடைக்க அனைத்து போலீஸ் அவர்களுக்கும் ஒரே மாதிரியான உடையை கொண்டு வர வேண்டும்.
ஒரே நாடு ஒரே சீருடை முக்கியத்துவம்:
நாட்டின் பலம் பெருகும் பொழுது தான் ஒவ்வொரு குடிமகனின் சக்தியும் பெரிதும் நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் ஊக்கம் பெறும். ஒவ்வொரு மாநிலத்தின் கடைசி வரிசையில் நிற்கின்ற கடைசி மனிதனுக்கும் பலன்கள் பெறுகின்ற பொழுதுதான் அது நல்ல நிர்வாகம் ஆகிறது. ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு அமைப்பு நம்ப தகுந்ததாக இருப்பது மிகவும் முக்கியம். மக்கள் மத்தியில் அதன் நம்பிக்கையும், பார்வையும் முக்கியத்துவம் ஆனது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே சீருடை திட்டமானது அனைத்து மாநிலத்திலும் உள்ள காவலர்களுக்கு தனிப்பெரும் அடையாளத்தை தருகின்ற திட்டமாக அமைய இருக்கும்.
Input & Image courtesy: The Hindu