Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள்.. தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு.!

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள்.. தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு.!

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள்.. தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2020 12:16 PM GMT

தற்போது ஆன்லைன் விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அனைவரிடத்திலும் செல்போன் இன்று உள்ளது. இணையவசதி குறைந்த செலவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அனைவரும் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்திவருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வருவதாக சில தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிட்டு வருகின்றனர். அது போன்றவர்களுக்கு மத்திய அரசு தற்போது கட்டுப்பாடு விதித்துள்ளது.


ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்போர், நிதி இழப்பு, அடிமையாவது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவற்றை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கேபிள் ‘டிவி’ ஒழுங்குமுறை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் ஆகியவை அடிப்படையில், நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான, ஒளி, ஒலிபரப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, மத்திய அரசு தனியார் தொலைக்காட்சிகளுக்கு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள்: ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், 18 வயதுக்கு குறைவானவர், அது போன்ற தோற்றம் அளிப்பவர் பங்கேற்க கூடாது. விளம்பரத்தின் 20 சதவீத இடத்தை, இது தொடர்பான அபாயங்களை சுட்டிக்காட்ட பயன்படுத்த வேண்டும். இந்திய விளம்பர தரநிர்ணய குழு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் நிதி அபாயம் உள்ளது. இது அடிமையாக்கக்கூடியது என்ற, எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இனியாவது இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடியை£காமல் இருந்தால் நல்லது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News