Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.66 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் - இந்தியா அசாத்திய சாதனை.!

நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.66 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் - இந்தியா அசாத்திய சாதனை.!

நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.66 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் - இந்தியா அசாத்திய சாதனை.!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  13 Dec 2020 1:56 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த 7 நாட்களாக உயிரிழப்பு 500-க்கும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 93,24,328 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 89,64,509-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 500-க்கும் குறைவாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 15-வது நாளாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் வீதம் 94.89-ஆக இன்று பதிவாகியுள்ளது.

நோயினால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உயிரிழப்புகள் குறைந்து வருவதே தற்போதைய பாதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகும். நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.66 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 7 நாட்களாக உயிரிழப்பு 500-க்கும் குறைவாகவே உள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவர வரைபடங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News