Kathir News
Begin typing your search above and press return to search.

உ பி: இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தில் OPD சேவையை தொடக்கம்!

உ பி: இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தில் OPD சேவையை தொடக்கம்!

உ பி: இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தில் OPD சேவையை தொடக்கம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 1:08 PM IST

உத்தர பிரதேச மாநிலத்தில் புற்றுநோயாளிகளுக்கு அமைக்கப்பட்ட நிறுவனமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேன்சர் இன்ஸ்டிடூட்(SSCI) OPD சேவைகளை தொடங்கி வைக்கவுள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்த SSCI முழுமையாக செயல்பட தொடங்கிவிட்டால் இது நாட்டில் புற்றுநோய் சிகிச்சை மையங்களில் மிக பெரியதாக இருக்கும். ஹரியானாவில் அமைந்துள்ள நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடூட் ஆப் ஜஜ்ஜர் 700 படுக்கைகளை கொண்டுள்ளதை விட இது 1250 படுக்கைகள் கொண்டு மிக பெரியதாக உள்ளது. மும்பையில் 650 படுகைகளை கொண்டுள்ள டாடா மெமோரியல் இன்ஸ்டிடூட்டை விட இது இரண்டுமடங்கு பெரியதாகும். டெல்லி ராஜிவ் காந்தி இன்ஸ்டிடூட் ஆப் கேன்சர் நிறுவனத்தை இந்த SSCI நான்கு மடங்கு பெரியது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் லக்னோவின் MP ராஜ்நாத் சிங் முன்னிலையில் முதலமைச்சர் ஆதித்யநாத் OPD பிளாக்கை திறந்து வைப்பார். SSCI யில் நோயாளிகளுக்கு கதிர்விச்சு மற்றும் அறுவை சிகிச்சைகளும் தொடங்கவுள்ளது. முதல் கட்டத்தில் 750 படுக்கைகளுடன் தொடங்கப்படவுள்ளது, இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில் மேலும் 500 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன.

"குறைந்த மற்றும் அதிநவீன சிகிச்சைகளை மக்களுக்கு வழங்குவது தவிர இது மாநிலத்தின் முதன்மை புற்றுநோய் சிகிச்சை மையங்களை திகழும்," என்று மருத்துவ துறையின் முதன்மை துணை செயலாளர் Dr ரஜ்னீஷ் துபே கூறினார்.

இந்த நிறுவனம் DMG வழிமுறைகளை பின்பற்றுகின்றது. இதன் கீழ் நோயாளிகளின் எதிரே அந்தந்த பிரிவின் நிபுணர்கள் ஒரு அறையில் அமர்ந்து சிகிச்சை அளிப்பர். மேலும் நோயாளிகளின் குறைகளை நிபுணர்கள் கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு அவர்கள் சிகிச்சை வழங்குவர். மேலும் இந்த சேவைகளை விரைவில் தொடங்க முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏழை மக்கள் தங்கள் சொத்துக்களை புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களில் செலவிடுவதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வசதிகள் உத்தர பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் மட்டும் பயனளிக்க போவதில்லை, பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் உதவும்.

2017 புற்றுநோய் எண்ணிக்கையின் அறிக்கைபடி, உத்தர பிரதேசம் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக இருந்தது. நாட்டில் புற்றுநோய் 39 லட்ச எண்ணிக்கையில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 6.7 லட்சம் எண்ணிக்கை இருந்தது. புற்றுநோய் அதிக பாதிப்பு எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் மட்டும் 44 சதவீதம் வகிக்கின்றது. இதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களான ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஹரியானா, அசாம், குஜராத், கேரளா, கர்நாடக மற்றும் மத்திய பிரதேசம் அதிக பாதிப்பு எண்ணிக்கையில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News