Begin typing your search above and press return to search.
பாலக்காடு: மலையை குடைந்து அமைக்கப்பட்ட 2வது சுரங்கப்பாதை திறப்பு!

By :
கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து திருச்சூர் நகருக்கு விரைந்து செல்கின்ற வகையில் குதிரான் என்ற இடத்தில் இருந்த மிகப்பெரிய மலையை குடைந்து 2 சுரங்கப்பாதைளை மத்திய அரசு அமைந்து வந்தது.
இப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் முதல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுப்பெற்று பிரதமர் மோடி 6 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரமாக செல்லும் நேரம் வெறும் 10 நிமிடங்களில் சென்று சேர்ந்துவிட முடியும் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே 2வது சுரங்கப்பாதையை திறக்கின்ற பணிகள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்திருப்பதால் நேற்று (ஜனவரி 20) மாலை ஆட்சியர் ஹரிதா வி.குமார் திறந்து வைத்தார். இதனால் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story