Kathir News
Begin typing your search above and press return to search.

மதரஸா பட்டங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அட்மிஷன் தருகின்றன - மதரஸாக்களை நவீனப்படுத்தும் உ.பி. அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு!

மதரஸா பட்டங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அட்மிஷன் தருகின்றன - மதரஸாக்களை நவீனப்படுத்தும் உ.பி. அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2022 9:29 AM IST

மதரஸாக்கள் நவீன மாயம்

உ.பி.யில் அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்கள் 16,500 எனவும் அங்கீகாரம் பெறாதவை 7,500 எனவும் தெரிய வந்துள்ளது. மதரஸாக்களில் பல்வேறு வகை குறைபாடுகள் இருப்பது அரசு நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. மதரஸாக்களை நவீனப்படுத்த அரசு தயாராகி வருகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, "முஸ்லிம்களின் ஒரு கையில் புனித குர் ஆனும், மறுகையில் லேப்டாப் கம்ப்யூட்டரும் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். உ.பி.யின் தியோபந்த் நகரில் உள்ள பழம்பெரும் தாரூல் உலூம் மதரஸாவின் நிர்வாகிகள் இதனை வரவேற்றனர்.

மதரஸாக்கள் எதிர்ப்பு

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 4,500 மதரஸாக்களின் மவுலானாக்கள் கூட்டதில் கலந்து கொண்டனர். மதரஸாக்கள் நவீனமயமாக்கல் தேவை இல்லை. மதரஸாக்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் திசை மாறி விடும். எங்களது கல்வியே இருக்க வேண்டும். இதே நடைமுறை தொடர வேண்டும் என்றனர்.

கல்லூரிகளில் சலுகை

முஸ்லிம்கள் பலர் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன், மதரஸாக்களில் சேர்த்து குர்ஆனை படிக்க வைக்கின்றனர். மதரஸாக்களில் அளிக்கப்படும் பட்டங்களுக்கு ஏற்ப, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பல தனியார் கல்வி நிலையங்களில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Input From: Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News