Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2020 6:54 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி, இன்று வாரணாசிக்கு சென்றார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ஹாண்டியா, ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வாரணாசி சுதந்திரம் அடைந்ததில் செயல்படுத்தாத பல திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளன. புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது.

யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதலமைச்சரானதில் இருந்து மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது. மாநிலத்தில் 12 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சேமித்து வைத்து பின்னர் அதனை அதிக லாபத்திற்கு விற்க முடியும். இந்த சேமிப்பு திறன் காரணமாக, முதல்முறையாக, இங்குள்ள விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன.


விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன, இது அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கம். இங்கு உள்ள எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதோடு அவர்களிடம் வதந்திகளை பரப்பி வருகின்றது. புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு திட்டமாகும். மேலும் அதை எதிர்க்கும் நபர்கள் கூட அதன் பலன்களைப் பெறுவார்கள் என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News