Kathir News
Begin typing your search above and press return to search.

OTT தளங்கள் I & B அமைச்சகத்தின் கீழ்: இனி என்ன நடக்கும்?

OTT தளங்கள் I & B அமைச்சகத்தின் கீழ்: இனி என்ன நடக்கும்?

OTT தளங்கள் I & B அமைச்சகத்தின் கீழ்: இனி என்ன நடக்கும்?

Saffron MomBy : Saffron Mom

  |  12 Nov 2020 6:45 AM GMT


மத்திய அரசாங்கம் வீடியோ ஸ்ட்ரீமிங் OTT தளங்களான, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்றவற்றை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (I &B) கீழ் கொண்டு வருகிறது. இதுவரை இத்தளங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இருந்தன.

2019 மார்ச் இறுதியில் 500 கோடி ரூபாய் அளவிற்கு OTT தளங்களுக்கு மார்க்கெட் அளவு இருந்தது. 2025 இறுதியில் இது நான்கு ஆயிரம் கோடி அளவிற்கு வளரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் 17 கோடி OTT வாடிக்கையாளர்கள் இருந்தனர். கொரானா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் இவை மிகவும் அதிகரித்திருக்கும்.

OTT தளங்கள் என்பது என்ன?

OTT அல்லது Over-The-Top தளங்கள் என்பவை, ஆடியோ மற்றும் வீடியோ நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தளங்களாகும். இவை முதலில் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்தது. பிறகு தாங்களே குறும்படங்கள், படங்கள், டாக்குமென்ட்ரி மற்றும் இணைய தொடர்களை பிரத்தியேகமாக தயாரிக்க தொடங்கினர்.

இத்தகைய தளங்கள் பார்ப்பதற்கு பெருமளவு நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன. செயற்கை அறிவை (AI) பயன்படுத்தி நாம் பார்த்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில், நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்கின்றன. பெரும்பாலான தளங்கள் குறிப்பிட்ட மாதாந்திர, வருடாந்திர கட்டணங்களை பெறுகின்றன.

OTT தளங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் எவை ?

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் OTT தளங்களை ஒழுங்குபடுத்த சட்டங்களும் விதிகளும் இல்லை .ஏனெனில், இத்தகைய பொழுதுபோக்கு தளங்கள் மிகவும் புதியது. தொலைக்காட்சி, பத்திரிக்கை, ரேடியோ ஆகியவை அரசால் வெளியிடப்படும் விதிகளைப் பின்பற்றுகின்றன .ஆனால் OTT தளங்கள் டிஜிட்டல் ஊடகம் அல்லது சமூக ஊடகம் என வகைப் படுத்தப்பட்டிருக்கிறது.

அவை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள், கட்டணங்கள், பெரியவர்களுக்கான படமா என்ற சான்றிதழ்கள் ஆகியவை குறித்த எந்த விதிகளும் இல்லை. இந்தியாவில் இத்தகைய தளங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்ததை தொடர்ந்து OTT தளங்களின் பிரதிநிதித்துவ அமைப்பான IAMAI (இன்டர்நெட் மொபைல் அசோசியேசன் ஆப் இந்தியா) தாங்களே சுய ஒழுங்குபடுத்திக் கொள்வதாக அறிவித்து இருந்தனர்.

OCCPC அமைப்பும் இது குறித்து புகார்களை பெற ஒரு கவுன்சில் அமைக்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால் இத்தகைய பரிந்துரைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் OTT தளங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகங்கள் அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் வருகிறது.

இப்பொழுது OTT தங்களின் நிலை என்ன?

அரசாங்கம் OTT தளங்களில் ஒளிபரப்பாகும் படங்கள், ஆடியோ விஷுவல் நிகழ்ச்சிகள், செய்தி மற்றும் நடப்பு விஷயங்களை குறித்த நிகழ்ச்சிகளையும் மேற்பார்வையிட முடிவு செய்திருப்பதால் OTT தளங்களின் முதல் சவால், தங்கள் நிகழ்ச்சிகளை சரி பார்ப்பதாகும். OTT தளங்கள் I &B அமைச்சகத்தின்கீழ் வருகிறதென்றால் தாங்கள் ஒளிபரப்ப விரும்பும் நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை சான்றிதழ் பெற வேண்டி இருக்கும். இது சில பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம்.

ஏனெனில் பெரும்பாலான OTT ட நிகழ்ச்சிகள் இந்தியாவில் உள்ள தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்படலாம்.இதனால் OTT தளங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் I & B அமைச்சகம் எந்த மாதிரியான விதிமுறைகளை அமல்படுத்துகிறது என்பதை பொறுத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News