Kathir News
Begin typing your search above and press return to search.

உலகத் தலைவர்களில் மக்கள் ஆதரவில் முதலிடம் பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி!

உலகத் தலைவர்களில் மக்கள் ஆதரவில் முதலிடம் பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி!

உலகத் தலைவர்களில் மக்கள் ஆதரவில் முதலிடம் பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி!

Saffron MomBy : Saffron Mom

  |  2 Jan 2021 12:22 PM GMT

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் மேற்கொண்ட ஆய்வில், 12 நாடுகளின் தலைவர்களை ஒப்பிடும் போது பிரதமர் நரேந்திர மோடி அதிகமாக 55 சதவீத ஆதரவை(approval rating) பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்னிங் கன்சல்ட் நடத்தியதை ஆய்வை குறித்து WION ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த கணக்கெடுப்பானது நாட்டில் உள்ள இளைஞர்கள் ஏழு நாட்கள் நடவடிக்கை குறித்து மற்றும் அது 13 நாடுகளும் ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படுகின்றது.மார்னிங் கன்சல்ட் இந்தியாவில் 2,126 இளைஞர்கள் இடையே ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் டிசம்பர் 21 அறிக்கைப்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமைக்கு 75 சதவீத ஆதரவையும் மற்றும் 20 சதவீதம் மட்டுமே ஆதரவையும் பெறவில்லை.

மேலும் கடைசியாக டிசம்பர் 23-இல் நடைபெற்ற ஆய்வில், டொனால்ட் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோ, இம்மானுவேல் மக்ரோன், ஸ்காட் மோரிசன், ஸ்காட் மோரிசன், ஜெய்ர் போல்சனாரோ மற்றும் மற்ற தலைவர்களை விட அதிக ஆதரவைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி 55 சதவீதம் அதிக ஆதரவைப் பெற்றுள்ள போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் -27% சதவீதத்தைப் பெற்றுள்ளார். இந்த கணக்கெடுப்பானது நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு மக்கள் அவர்களின் தலைவரை ஆதரிப்பது மற்றும் மறுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ளது.

மார்னிங் கன்சல்ட் இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, தென் கொரியா, ஸ்பெயின், மற்றும் அமெரிக்காவில் உள்ள தலைவர்களுக்கு ஆதரவைக் கணக்கெடுத்துள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பானது அந்தந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் நாடுமுழுவதும் தலைவர்களின் ஆதரவு குறித்து தினமும் 11,000 நேர்காணலை நடத்தியது. மேலும் இந்த கணக்கெடுப்பானது கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்குப் பின்னர் நடைபெற்றதுக்கு முக்கியமாகும், இதில் அது பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு குறித்தும் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தியா - கார்வி கருத்தின் படி, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பேர், பொருளாதார சிக்கலை மோடி அரசாங்கம் கையாண்டது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் பொருளாதார சிக்கல்களைப் பிரதமர் மோடி அரசாங்கம் கையாண்டது குறித்து நாட்டில் 71 சதவீத குடி மக்கள் சிறந்தது என்று மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா டுடேவின் Mood Of The Nation கணக்கெடுப்பில், மொத்த கணக்கெடுப்பின் பங்கேற்பில் 43 சதவீதம் பேர் பொருளாதார சிக்கலைக் கையாண்டதில் மன்மோகன் சிங் அரசாங்கத்தை விடப் பிரதமர் மோடி அரசாங்கம் சிறந்தது என்று தெரிவித்துள்ளனர். முந்தைய அரசாங்கத்தை விட மோடி அரசாங்கம் சிறந்தது என்று கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 88 சதவீதம் பேர் கூறியதைக் கணக்கெடுப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News