Kathir News
Begin typing your search above and press return to search.

713 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: வங்கிக் கணக்கில் நேரடியாக பயனடைந்த 1 கோடி விவசாயிகள்!

ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போதைய நெல் கொள்முதல் மூலம் பயனடைந்து உள்ளனர்.

713 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: வங்கிக் கணக்கில் நேரடியாக பயனடைந்த 1 கோடி விவசாயிகள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2023 1:45 AM GMT

தற்போது இந்தியா முழுவதும் இருந்து 2022-2023-க்கான காலகட்டத்தில் கரீஃப் பருவ நெல் கொள்முதல் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து 2023 மார்ச் 1-ம் தேதி வரை 713 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதார விலையாக ரூ.1,46,960 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.


நெல் கொள்முதல் செய்யப்படும்போது கூட்டநெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 2023 மார்ச் 1-ம் தேதி வரை மத்திய தொகுப்பிலிருந்து 246 லட்சம் மெட்ரிக் டன் அரிசி பெறப்பட்டுள்ளது. நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவான வகையில், மத்திய தொகுப்பில் தற்போது போதுமான அளவு அரிசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கே.எம்.எஸ் 2022-23-க்கான கரீஃப் பருவ நெல் கொள்முதல் மூலம் 766 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் எதிர்வரும் ரபி பருவத்தில் 158 லட்சம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து கே.எம்.எஸ் 2022-23-காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 900 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News