கமல், சீமானுக்கு கூட்டணி வலை வீசும் ஒவைசி : திருச்சி கூட்டத்தில் முக்கிய முடிவு.!
கமல், சீமானுக்கு கூட்டணி வலை வீசும் ஒவைசி : திருச்சி கூட்டத்தில் முக்கிய முடிவு.!

தமிழக கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைக்க முன்வந்தால் அவர்களுடன் பேசத் தயார் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் தமிழக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் அதிமுகவை விட திமுக தலைமை அதிக பீதியடைந்துள்ளதாக கூறபபடுகிறது.
ஐதராபாதில் மட்டுமே செயல்பட்டு வந்த அசாதுதீன் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்., தேசிய அளவில் இப்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. சமீபத்தில் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் கட்சி அமைப்பு சரிவர இல்லாத நிலையிலும், அங்கே இரண்டு இடங்களில் வென்றது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில், ஏழு இடங்களில் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.சமீபத்தில் பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், போட்டியிட்ட, 20 இடங்களில், ஐந்து தொகுதிகளில் வென்று அசத்தியது.
நாங்கள் ஆட்சியை பிடிக்க முடியாததற்கு, ஓவைசி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டதே காரணம்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புலம்பும் அளவுக்கு அவர் தனது கட்சியின் மதிப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக, ஓவைசி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்கத்துடன், தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலிலும் போட்டியிட, ஏ.ஐ.எம்.ஐ.எம்., திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், 15 மாவட்டங்களில் உள்ள, 50 தொகுதிகளில் போட்டியிட, 'சர்வே' எடுக்கப்பட்டு வருவதக்கவும், அடுத்த மாதம் நடக்கும், கட்சியின் செயற்குழுவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இது தொடர்பாக ஒவைசி சமீபத்தில் திருச்சிக்கு வந்ததாகவும், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்த ஆலோசனையில் முஸ்லிம் மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த 30 தொகுதிகள் பற்றி அதிகம் பேசப்ப்ட்டுள்ளதாக கூறபபடுகிறது. அதில் தங்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழகத்தில் உள்ள ஒவைசியின் ஆதரவாளர்கள் பேசியுள்ளனர். ஒவைசி தமிழக களத்தில் இறங்கினால்தான் தமிழகத்தில் முஸ்லிம்கள் வலிமையை தனியாக கட்டமுடியும் என பலர் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும் தங்கள் கட்சியுடன் கமலஹாசன், சீமான் போன்ற சிறிய , புதிய கட்சிகள் யாரேனும் கூட்டணி வைக்க விரும்பினால் தாரளமாக பேச தயார் என ஒவைசி கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஏற்கனவே திருமாவளவன் ஒவைசி இடையே பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திமுகவில் கூட்டணியில் இருந்து வெளியேறினால் வி.சி.கவின் ஒரு எம்.பி.பதவி பறிக்கப்படும் என்பதால் திருமாவளவன் மேற்கொண்டு பேசவில்லை எனக் கூறபபடுகிறது.
இந்நிலையில் ஒவைசியின் இந்த புதிய வருகை குறித்த அறிவிப்பு இப்போதே தமிழகத்தில் உள்ள இரு திராவிட கட்சிகளுக்குமே மிரட்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் வாக்குகளை அதிக அளவில் வேட்டையாடும் திமுகவுக்கு ஒரு பக்கம் ரஜினி என்றால் இன்னொரு பக்கம் இந்த ஒவைசியும் சேர்ந்து திகில் ஊட்டுவதாக கூறப்படுகிறது.