Kathir News
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு.!

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு பிரதமர் மோடி அவரச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  25 April 2021 5:58 PM IST

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சிலருக்கு மூச்சு திணறல் அதிகரிக்கும்போது, அவர்களுக்கான ஆக்சிஜனும் அதிகரித்துள்ளது.

இதனால் ஆக்சிஜன் தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக, பிரதமர் மோடி விமானப்படை மற்றும் ரயில்வேத்துறை, கப்பற்படை உள்ளிட்டவை துரிதப்படுத்தினார். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆக்சிஜனை எடுத்து செல்வதற்கு ராணுவத்தின் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில், நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு பிரதமர் மோடி அவரச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவவது: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் 551 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





இந்த மையங்கள், பொது சுகாதார வளாகங்களில் அமைக்கப்படும். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்த மையங்கள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News