தில்லி காற்று மாசுபாடு - விவசாய முறையில் மாற்றம் கொண்டு வந்து கட்டுப்படுத்திய மத்திய அரசின் சாதனை..!
Paddy straw generated in Punjab, Haryana and U.P. expected to come down significantly this year

By : Muruganandham
ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தின் தேசிய தலைநகர் பிராந்திய மாவட்டங்களில் வைக்கோல் உற்பத்தியை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன.
அறுவடைக்கு பின், விவசாய நிலங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதால், தில்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை குறைக்க, மாற்று பயிர் விளைவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, இந்த பகுதிகளில் நெல் விளைவிக்கப்பட்ட பகுதியின் அளவு 7.72 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் பாசுமதி அல்லாத வகைகளில் இருந்து வைக்கோல் உற்பத்தியும், கடந்தாண்டை விட இந்தாண்டு 12.41 சதவீதம் குறையும் எனத் தெரிகிறது.
பியுஎஸ்ஏ-44 ரக நெல் உற்பத்தியை குறைத்து, குறைந்த காலத்தில் அதிகம் விளையும் நெல் மற்றும் மாற்று பயிர்களை விவசாயிகள் விளைவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இது நல்ல பயனை அளிக்கத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு வட மாநிலங்களில் வைக்கோல் உற்பத்தி 1.31 மில்லியன் டன் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநிலங்களில் இருந்து கடந்த ஆண்டு 28.4 மில்லியன் டன் வைக்கோல் உற்பத்தியானது. இது இந்தாண்டில் 26.21 மில்லியன் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லுக்கு பதில், மாற்று பயிர்களை விளைவிக்கும் திட்டம் பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.
