Kathir News
Begin typing your search above and press return to search.

20 ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ள பாகிஸ்தான்!

20 ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ள பாகிஸ்தான்!

20 ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ள பாகிஸ்தான்!

Saffron MomBy : Saffron Mom

  |  30 Dec 2020 12:08 PM GMT

பாகிஸ்தான் தனது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறிக் கொண்டே இருக்கின்றது. அதே 2003 இல் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் இந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் எல்லைக் கோடு கட்டுப்பாடு பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் ஜம்மு & காஷ்மீர் எல்லைக் கோடு கட்டுப்பாடு(LoC) பகுதியில் 5,100 தாக்குதலை நடத்தியுள்ளது. இது கடந்த 18 ஆண்டுகளை விட எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது.

பாகிஸ்தானின் இந்த விதிமீறல்களால் 24 பாதுகாப்பு படையினர் உட்பட 36 பேர் இறந்துள்ளனர். மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 15 இராணுவ வீரர்கள் எல்லைக் கோடு கட்டுப்பாடு பகுதியில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 2019 இல் பாகிஸ்தானின் எல்லைமீறித் தாக்குதல் 3,289 முறை நடந்துள்ளது. இந்த தாக்குதலில் காஷ்மீரின் சட்டம் 370 திரும்பப்பெற்ற பின்பும் ஆகஸ்ட் 2019 இல் மட்டும் 1,565 முறை நடந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த போர்நிறுத்த மீறல்கள் 2,936 முறை பதிவாகியுள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு 8 வழக்குப் பதிவாகியுள்ளது. இதனால் 61 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு பாகிஸ்தானின் விதிமீறல் தாக்குதலானது 2017 விட ஐந்து முறை அதிகமாக உள்ளது. 2017 இல் தாக்குதலில் 12 குடிமக்கள் மற்றும் 19 பாதுகாப்பு படையினர் உட்பட 31 பேர் இறந்துள்ளனர், மேலும் 151 பேர் காயமடைந்துள்ளனர். 2003 இல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்னர், 2002 இல் பாகிஸ்தானின் 8,376 எல்லைப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆனால் 2004, 2005 மற்றும் 2006 இல் எதுவும் பதிவாகவில்லை. பாகிஸ்தானின் விதிமீறல்கள் 2009 இல்'இருந்தே அதிகமடைந்துள்ளது. இந்த தாக்குதலால் ஜம்மு &காஷ்மீர் எல்லைப் பகுதியில் குடியிருக்கும் மக்களை அதிகம் பாதிப்படையச் செய்கின்றது. மேலும் பாகிஸ்தானின் துப்பாக்கி தாக்குதலால் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக் கட்டாயப்படுத்தியது மட்டுமல்லாமல் இது அவர்களின் கல்வி மற்றும் விவசாயத்தையும் பாதித்ததது. எல்லைக் கோடு கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக அந்த பகுதி மற்றும் தேசிய எல்லைகளில் பதுங்கு குழிகள் அமைக்க 415 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News