Kathir News
Begin typing your search above and press return to search.

370 சட்டப்பிரிவு ரத்திற்கு எதிரான ஜம்மு காஷ்மீர் போராட்டங்களின் பின்னணியில் பாகிஸ்தான் - அம்பலமான உண்மை!

370 சட்டப்பிரிவு ரத்திற்கு எதிரான ஜம்மு காஷ்மீர் போராட்டங்களின் பின்னணியில் பாகிஸ்தான் - அம்பலமான உண்மை!

370 சட்டப்பிரிவு ரத்திற்கு எதிரான ஜம்மு காஷ்மீர் போராட்டங்களின் பின்னணியில் பாகிஸ்தான் - அம்பலமான உண்மை!

Saffron MomBy : Saffron Mom

  |  5 Jan 2021 9:32 AM GMT

ஜம்மு & காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019-இல் சட்டப்பிரிவு 370 திரும்பப் பெற்றுச் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து அங்குச் சட்டம் 35A ரத்து செய்யப்பட்டது. தற்போது அமல்படுத்தப் பட்டுள்ள சட்டத்தில் கீழ் அங்கு யார் வேண்டுமானாலும் நிலங்களைப் பெற முடியும். இந்த நடவடிக்கைக்குப் பின்னர் காஷ்மீரில் பல்வேறு போராட்டங்களும் எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கின. அங்குப் பலரால் பிரச்சாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த போராட்டம் மற்றும் கலவரத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் கை இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றது.

குற்றம் சாட்டப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் இர்பான் மீர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், பாகிஸ்தானின் ISI அமைப்பு 370 திரும்பப்பெற்றதுக்கு எதிராகக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டம் நடத்துவதற்குத் தன்னார்வ குழு(NGO) அமைப்பதற்காக மிர்க்கு பணம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சட்டம் 370 இருக்க வேண்டியதற்கான பிரச்சாரத்தை நடத்துவதற்கு 1.5 லட்சம் பணம் வழங்கியுள்ளது.

டைம்ஸ் நொவ் வெளியிட்ட அறிக்கையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் செயற்பாட்டாளர் இர்பான் மீர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து மற்றும் அவர் சட்டம் 370-க்கு ஆதரவாகப் போராட்டம் மற்றும் பிரச்சாரம் நடத்தக்கோரி 1.5 லட்சம் வழங்கியதாக NIA-க்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் காஷ்மீரில் 370 சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற்று மற்றும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து பல்வேறு பெரிய அளவிலான போராட்டங்கள் ஏற்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசைத் தாக்கப் போராட்டக்காரர்கள் அணிகளைத் திரட்டியுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது இதுபோன்ற செயல்களால் மக்கள் தூண்டப்பட்டனரா என்றும் NIA விசாரணை நடத்தி வருகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News