Kathir News
Begin typing your search above and press return to search.

உபியில் 1,000 பேர் கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது.!

கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது வரை சுமார் 1000 பேருக்கு மேல் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உபியில் 1,000 பேர் கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 Jun 2021 9:25 AM IST

வாய் பேச மற்றும் காது கேட்க இயலாமல் உள்ள பெண்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவு அமைப்பைச் சேர்ந்த 2 பேரை உத்தரபிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர். இந்த இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு வாய் பேச மற்றும் காது கேட்க இயதால மாற்றுத் திறனாளியான பெண்கள் மற்றும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு மாற்றி வருவதாக புகார்கள் எழுந்தது.





இதனை தொடர்ந்து பெண்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது வரை சுமார் 1000 பேருக்கு மேல் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு என்று நொய்டா ஜாமியா நகரில் 'இஸ்லாமிய தாவா சென்டர்' என்ற அமைப்பு உருவாக்கியுள்ளனர். அங்குதான் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை மூளைச்சலவை செய்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் பின்னால் பெரிய கும்பல் இருக்கிறது. அந்த கும்பலை பிடிக்கும் பணியில் உபி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பிடித்துவிடுவோம் எனக்கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News