கொசுக்களால் பரவும் மர்ம நோய்? இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்!

By : Kathir Webdesk
கொசுக்களால் பரவும் மர்ம நோய்களை தடுக்க இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பல பகுதிகளில் மலேரியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 62 லட்சம் கொசு வலைகளை இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியது. வெள்ள பாதிப்புக்கு பிறகு கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொசு வலைகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். நவம்பர் மாத மத்தியில் இவை கிடைக்கும் என நம்புகிறோம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர நோய் பரவலை தடுக்க மருத்துவ பொருட்கள் அனுப்ப சொல்லியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு பிறகு பரவிவரும் நோய்களால், சுகாதார பேரிடருக்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Input From: ZeeNews
