இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் சிறுமிகள்.. மீண்டும் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு.!
இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் சிறுமிகள்.. மீண்டும் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு.!

By : Kathir Webdesk
ஜம்மு காஷ்மீர், மாநிலம் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று காலை வழக்கம்போல இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதனைதொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் அந்த 2 சிறுமிகளையும் பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த லைபா சபீர் 17, சனா சபீர் 13, என்பது தெரியவந்தது. மேலும், அந்த இரண்டு சிறுமிகளும் தவறுதலாக இந்திய எல்லையில் நுழைந்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அந்த இரண்டு சிறுமிகளுக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர் சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். இந்நிலையில், இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த லைபா சபீர் மற்றும் சனா சபீர் இரண்டு சிறுமிகளையும் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
