Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த பாகிஸ்தான் பெண்மணி கைது!

இந்தியாவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த பாகிஸ்தான் பெண்மணி கைது!

இந்தியாவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த பாகிஸ்தான் பெண்மணி கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  14 Feb 2021 2:34 PM GMT

உத்தரப் பிரதேசத்தில் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இடைக்கால பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வந்த 65 வயதுடைய பாகிஸ்தானியப் பெண்மணி காவல்துறையால் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பானோ பேகம் என்னும் அவர் உத்தரப் பிரதேசத்தில் கடாவ் கிராமத்தில் இடைக்கால பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும் ஜனவரியில் அவரது பேரில் FIR பதிவு செய்யப்பட்டவுடன் தலைமறைவாக இருந்து வந்ததாக எட்டா SSP சுனில் குமார் சிங் தெரிவித்தார்.

பானோ பேகம் மீது புகாரானது கிராம மக்களால் கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவராக இருந்து கொண்டு கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் அவர் பங்குபெற்றதாகப் புகாரளித்துள்ளனர். மேலும் பஞ்சாயத்துத் தலைவர் இறந்ததைத் தொடர்ந்து, இவர் இடைக்கால பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விசாரணையின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த பானோ பேகம் 1980 இல் ஜூன் 8 இல் எட்டாவை சேர்ந்த அஷ்ரத் அலியைத் திருமணம் செய்துள்ளார். திருமணத்தைத் தொடர்ந்து, அவர் தனது விசாவை நீடித்துக் கொண்டே இந்தியாவில் வசித்துவந்துள்ளார்.

ஆதார் கார்டை பெற்ற பின்னர் 2015 பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "அதே கிராமத்தைச் சேர்ந்த குவைடா கான் அளித்துள்ள புகாரில், பானோ பேகம் நீண்ட கால விசாவை வைத்துக்கொண்டு வசித்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் இந்தியக் குடிமகளாக இல்லை, இருப்பினும் அவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்."

கடந்த ஆறு மாதங்களாக பானோ பேகம் இடைக்கால பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வந்தாக துணை மாஜிஸ்திரேட் SP வர்மா தெரிவித்தார். "வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு பெறப் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வருகின்றது. வாக்காளர் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது," என்று SDM தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News