Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரியே பணம் கொடுத்து எல்லை ஊடுருவ பயங்கரவாதியை அனுப்பிய சம்பவம் - எல்லையில் பதற்றம்

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை என பயங்கரவாதி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரியே பணம் கொடுத்து எல்லை ஊடுருவ பயங்கரவாதியை அனுப்பிய சம்பவம் - எல்லையில் பதற்றம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 Aug 2022 7:01 PM IST

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை என பயங்கரவாதி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.


கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு பயங்கரவாதிகள் மூன்று பேர் ஊடுருவும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


அக்கனூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுபவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது, முன்னதாக ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று நௌஷாராவில் ஜக்கர் செக்டரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் அதிகாலை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் 3 பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டனர், அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.


இதனையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தார்கள, உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர் காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ச்கோட் பகுதியில் வசிக்கும் தபாரக் உசைன் என்பது அடையாளம் காணப்பட்டது மேலும் நடைபெற்ற விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அந்த விசாரணையில் இந்திய ராணுவ முகாம் மீது தாக்கத்தில் நடத்த திட்டமிட்டு இருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான், பாகிஸ்தான் யூனுஸ் சவுத்ரி என்பவர் தனக்கு 30000 கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசைன் தெரிவித்தார்.


பாகிஸ்தான் உளவுத்துறையே இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதியை பணம் கொடுத்து அனுப்பிய தகவல் எல்லை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News