"பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் பயங்கரவாதம் என்ற மறைமுக போரிலும் நாம் வெற்றி பெறுவோம்" - ராஜ்நாத் சிங் உறுதி !
By : Dhivakar
"பாகிஸ்தானுடனான நேரடி போரில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நான் உறுதியாக கூறுகிறேன், அந்நாட்டில் இருந்து ஏவப்படும் பயங்கரவாதம் என்ற மறைமுக போரிலும் நாம் வெற்றி பெறுவோம்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அண்டைய நாடான பாகிஸ்தானுக்கு எதிரான1971ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவாடைந்ததை கொண்டாடும் வகையில், புதுடெல்லியில் ராணுவ தடவாடங்கள் கனகாட்சி நடைபெற்றுவருகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
அவர் ஆற்றிய உரையில் பேசியதாவது : 1971 ஆண்டு நடைபெற்ற போர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைவுபடுத்துவதாக கூறினார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மதத்தின் பெயரால் நாடு பிரிக்கப்பட்டது வரலாற்றுத் தவறு. 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தானின் அனைத்து திட்டங்களையும் நமது பாதுகாப்பு படை தோற்கடித்தது. தற்போதும் அந்த நாட்டில் இருந்து வரும் பயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் நடவடிக்கையில் நமது பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானுடனான நேரடி போரில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நான் உறுதியாக கூறுகிறேன், அந்நாட்டில் இருந்து ஏவப்படும் பயங்கரவாதம் என்ற மறைமுக போரிலும் நாம் வெற்றி பெறுவோம்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதால் இந்த ராணுவ தளவாட கண்காட்சியை எளிமையை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.