Kathir News
Begin typing your search above and press return to search.

ஆதார் – Pan/EPFO இணைப்பு வசதி குறித்து ஊடகங்கள் பரப்பி வரும் வதந்தி : பொய் செய்திகளுக்கு UIDAI கொடுத்த பதிலடி !

''No Outages In Aadhaar Linking Facility With PAN Card, EPFO'': Government

ஆதார் – Pan/EPFO இணைப்பு வசதி குறித்து ஊடகங்கள் பரப்பி வரும் வதந்தி : பொய் செய்திகளுக்கு UIDAI கொடுத்த பதிலடி !

The government clarified that the Aadhaar linking facility with PAN, EPF is working fine

MuruganandhamBy : Muruganandham

  |  2 Sep 2021 7:30 AM GMT

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனது அனைத்து சேவைகளும் நிலையானவை மற்றும் நன்றாக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளது. ஆதார் - Pan/EPFO இணைப்பு வசதியில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை. இது அங்கீகார அடிப்படையிலான வசதி என தெரிவித்துள்ளது.

UIDAI கடந்த வாரத்தில் அதன் அமைப்புகளில் சில அத்தியாவசிய பாதுகாப்பு மேம்பாட்டைச் செய்து வருவதால், சில ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மையங்களில் பதிவு மற்றும் மொபைல் எண் புதுப்பித்தல் சேவையில் மட்டும் சில சேவை குறுக்கீடுகள் பதிவாகியுள்ளது. அத்தியாவசிய பாதுகாப்பு மேம்பாட்டைச் செய்த பிறகு இப்போது நன்றாக செயல்படுகிறது.

UIDAI அமைப்பு நன்றாக செயல்பட்டாலும், பொதுமக்களுக்கு எந்தவொரு அசௌகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கண்காணித்து வருவதாக UIDAI மேலும் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் தேதியில் மேம்படுத்தப்பட்ட செயல்முறை தொடங்கியதிலிருந்து கடந்த 9 நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 5.68 லட்சம் ஆதார் பதிவு நடந்துள்ளது.

51 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் அங்கீகார பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 5.3 கோடிக்கும் அதிகமான அங்கீகாரங்கள் நடந்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆதாரை Pan/EPFO உடன் இணைப்பதில் UIDAI அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சில ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் போது UIDAI இது போன்ற ஊடக அறிக்கைகள் துல்லியமானவை அல்ல என்று கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News