Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாபில் விமானப்படை போர் விமானம் விழுந்து விபத்து.!

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று அதிகாலை நேரத்தில் விபத்திற்குள்ளானது. இதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.

பஞ்சாபில் விமானப்படை போர் விமானம் விழுந்து விபத்து.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 May 2021 9:33 AM IST

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று அதிகாலை நேரத்தில் விபத்திற்குள்ளானது. இதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திய விமானப்படையின் மிக் 21 ரக போர் விமானம், இன்று அதிகாலை 1 மணியளவில் பஞ்சாப் மாநிலம், மோகா அருகே தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், போர் விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார்.

விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News