கர்நாடகவில் மதமாற்றத் தடை சட்டத்தின் கீழ் பாயப்போகும் முதல் வழக்கு - மனைவியுடன் அகப்பட்ட பாதிரியார்!

By : Kathir Webdesk
கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது மனைவி மீது கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
குடகு, மஞ்சல்லி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியை மதமாற்றம் செய்ததற்காக பாதிரியாருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவரது மனைவி குறிச்சன் வி மற்றும் 57 வயதுடைய சலீனம்மா ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குட்டா காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 295 (a) கீழ் பாதிரியார் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. .
அந்தத் தொழிலாளியுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற வலதுசாரித் தலைவர்கள், மதமாற்றத் தடைச் சட்டத்தை பாதிரியார் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
கர்நாடகவில் மதமாற்றத் தடை மசோதாவுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த குற்றதிற்கு 25,000 அபராதத்துடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் ஆழமாக காயப்படுத்தியுள்ளது என்று பெங்களூரு பேராயர் ரெவரெண்ட் பீட்டர் மச்சாடோ புதன்கிழமை கூறினார்.
Inputs From: Hindustan Times
