Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் பென்ஷன் கொடுக்கவே இவ்வளோ ஆயிரம் கோடி செலவாகிறதா? இன்னும் 100 அக்னிபத் திட்டம் வந்தாலும் தப்பே இல்ல!

இந்தியாவில் பென்ஷன் கொடுக்கவே இவ்வளோ ஆயிரம் கோடி செலவாகிறதா? இன்னும் 100 அக்னிபத் திட்டம் வந்தாலும் தப்பே இல்ல!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jun 2022 12:31 AM GMT

இந்தியாவில் ஆண்டு தோறும் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டின் 50 சதவீத நிதி, ராணுவம் கடற்படை மற்றும் விமான படையில் ஓய்வூதிற்காகவே செலவிடப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வெறும் 5 சதவீத நிதியே ஒதுக்கப்படுகிறது.

2022- 23- ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் கல்வி இயக்க செலவுகளை விட, ஓய்வூதியத்திற்கு அதிக அளவில் செலவிடப்பட்டது. மத்திய அரசு பணி செய்து ஓய்வு பெறுபவர்களில் முப்படையை சேர்ந்தவர்கள் 50 சதவீதமாக உள்ளனர். இது ரயில்வே துறையை விட இரு மடங்காகும். கடந்த ஏழு ஆண்டுகளில் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் அதிகரித்துள்ளது.

2023 நிதியாண்டுக்கான பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான செலவினங்களுடன் ஒப்பிடுகையில், கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்ட வருவாய், செலவினங்களை விட அதிகமாக உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் தபால்துறை ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 3 . 2% ஆகவே நீடிக்கிறது. ரயில்வே பொறுத்தவரை ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 1 .7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் ராணுவத்திலோ ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் அதிகரித்துள்ளது.

இது போன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டே மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Input From: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News