Kathir News
Begin typing your search above and press return to search.

மதமாற்றத்தில் ஈடுபடும் கேரள தேவாலயம்: செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் தாக்குதல்!

கேரளாவில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயம் மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கான ஆதாரத்தை திரட்ட சென்ற பத்திரிக்கையாளரை போலீசார் முன்னிலையில் தாக்கிய சம்பவம்.

மதமாற்றத்தில் ஈடுபடும் கேரள தேவாலயம்: செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் தாக்குதல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Nov 2022 2:53 AM GMT

பெந்தகோஸ்தே தேவாலயம் மதமாற்றத்திற்காக பல்வேறு மக்கள்களை ஈடுபடுத்தி வருவதாக சமீபத்தில் செய்து கிடைத்தது. குறிப்பாக கேரளா உயர் நீதிமன்றம் ஏற்கனவே இந்த தேவாலயத்திற்கு பொதுமக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் முயற்சியில் ஈடுபடுத்துவது மற்றும் பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளை செய்வது போன்ற பல்வேறு வகையான செயல்களை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று தேவாலயத்திற்கு ஏற்கனவே கூறி இருக்கிறது. இருந்தாலும் இந்த வழக்கை எடுத்து தற்பொழுதும் தேவாலயம் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


இந்து தேவாலயத்தின் சட்டப்பிரத செயல்களை வெளிக்கொண்டுவரும் விதமாக செய்தியாளர் ஒருவர் அங்கு சென்று இருக்கிறார். சட்டவிரோத வழிபாட்டின் காட்சிகளை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்களை தேவாலய உறுப்பினர்கள் தாக்கியுள்ளனர். மேலும் இது போன்ற தீய பழக்கவழக்கங்களையும், கட்டாய மதமாற்றத்தையும் தடுக்க வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்யாமல் தேவாலயத்திற்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.


காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஊடகவியலாளர்களின் அவல நிலையை கண்டும் காணாமலும் இருந்தனர். பெந்தகோஸ்தே தேவாலயத்தின் எலோஹிம் நற்செய்தி உலகளாவிய ஆராதனை மையம் இயங்கி வருகிறது. தீய ஆவிகளை 'அழிக்க' முடியும் என வழிபாட்டு திருச்சபையின் தலைவர் பாதிரியார் கூறுகிறார். இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பதன் மூலம் பின்பற்றுபவர்களை அதிகரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம்.பொதுமக்களின் பல புகார்களை அடுத்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, அனுமதியின்றி வணிக வளாகத்தில் இயங்கி வரும் வழிபாட்டு மன்றத்தை மூட உத்தரவிட்டது.

Input & Image courtesy: Hindu post News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News