Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பர் 1ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி.. அரசு உத்தரவு.!

டிசம்பர் 1ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி.. அரசு உத்தரவு.!

டிசம்பர் 1ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி.. அரசு உத்தரவு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2020 6:09 PM IST

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறைகள் விடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதே போன்று கல்வி நிலையங்களையும் உரிய பாதுகாப்புடன் திறக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.


இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை டிசம்பர் 1ம் தேதி முதல் திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


மேலும், கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு, போதுமான சமூக இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள், கல்லூரிகளிடம் கருத்து கேட்டு டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த நிலையில் அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News