கொரோனா பேரிடர்.. பி.எப்., வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கலாம்.. மத்திய அரசு உத்தரவு.!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள், தங்களது கணக்குகளில் இருந்து அவசர தேவைகளுக்காக முன்பணம் எடுத்துக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள், தங்களது கணக்குகளில் இருந்து அவசர தேவைகளுக்காக முன்பணம் எடுத்துக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இது போன்ற சமயங்களில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பல தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத் தொகையில் முன்பணத்தை எடுத்துக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு அறிவிப்புக்கு பல லட்சம் தொழிலாளர்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். பேரிடர் காலத்தில் இந்த பணம் உதவும் எனவும் தொழிலாளர்கள் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.