Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி: பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம்!

இந்திய முப்படையின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்தவர் பிபின் ராவத் 3, இவர் கடந்த 8ம் தேதி நீலகிரியில் உள்ள வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெறுவதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் மரத்தில் மோதி வெடித்து சிதறியது.

டெல்லி: பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம்!

ThangaveluBy : Thangavelu

  |  11 Dec 2021 2:45 AM GMT

இந்திய முப்படையின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்தவர் பிபின் ராவத் 3, இவர் கடந்த 8ம் தேதி நீலகிரியில் உள்ள வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெறுவதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் மரத்தில் மோதி வெடித்து சிதறியது.


இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரச்சம்பவத்தால் இந்திய நாடே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தற்போது பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ குழு இரவு பகல் என்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்கள் கோவை விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டு, பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் பிற அதிகாரிகளின் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் முப்படையின் தளபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட முக்கியத்துறையின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து 9ம் தேதி இரவு பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க்கில் உள்ள அவர்களின் இல்லத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்கள் தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.

இதனையடுத்து இறுதி ஊர்வலம் நேற்று (டிசம்பர் 10) பிற்பகல் 2.20 மணிக்கு தொடங்கியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் உடல்கள் ஏற்றப்பட்டு டெல்லி கன்டோன்மெண்டுக்கு உட்பட்ட பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது முப்படைகளையும் சேர்ந்த வீரர்கள், பிபின் ராவத் உடல் வைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்தியை சூழ்ந்தவாறே சென்றனர். இதில் முப்படைகளை சேர்ந்தவர்கள் இசைக்கலை வாத்தியங்களை இசைத்தபடியே சென்றனர். அப்போது சாலைகளில் குழுமியிருந்த பொதுமக்களும் வீரவணக்கத்தை செலுத்தினர். தேசிய கொடிகளை கையில் ஏந்தியவாறு ஜெய்ஹிந்த் என்ற முழக்கங்களை எழுப்பி வழியனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் ஊர்வலம் பிரார் சதுக்கத்தை அடைந்த பின்னர் ராவத் தம்பதிகளின் உடல்கள் வாகனங்களில் இருந்து இறக்கி அங்கு இருந்த மேடைகளில் வைக்கப்பட்டது. அப்போது முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ராணுவ அதிகாரிகள் என்று பலரும் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணி ஆகியோர் தங்களின் பெற்றோர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி கண்ணீருடன் விடை கொடுத்தனர். பிபின் ராவத்தின் உறவினர்களும் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அதனை தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களும் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ராவத்தின் பெட்டி மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவர்களின் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் உடல்களும் ஒரே மேடையில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகளை மகள்கள் செய்தனர். அப்போது 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் சிதைக்கு மகள்கள் தீ மூட்டினர். இதனால் மயானத்தில் சோகக்காட்சிகளும், அதனை தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்த்த நாட்டு மக்களும் சோகத்தில் மூழ்கினர். அங்கு இருந்த ராணுவ வீரர்களும் தங்களின் முப்படை தலைமை தளபதிக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

Source, Image Courtesy: Ani


Next Story
கதிர் தொகுப்பு
Trending News