தோத்துட்டா பழியை மல்லிகார்ஜுன கார்கே மீது போடுவதே திட்டம் - காங்கிரஸ் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திய அனுராக் தாக்கூர்
தேர்தல் தோல்வியை மல்லிகார்ஜுன கார்கே மீது சுமத்த ராகுல் காந்தி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார்.
By : Mohan Raj
தேர்தல் தோல்வியை மல்லிகார்ஜுன கார்கே மீது சுமத்த ராகுல் காந்தி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் தொகுதிக்கு காங்கிரஸின் புதிய தலைவரை பொறுப்பாக்கவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ளவில்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், 'தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி செல்லாத வியூகமாக அல்லது புதிய ராஜநீதியா என்பதை அவர் தான் விளக்க வேண்டும்' என்றார். மேலும் அவர் பேசுகையில், 'ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடத்தும் யாத்திரைகள் பிரிவினை பேசுவோரை உடன் அழைத்து அழைத்துச் செல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' எனவும் கூறினார்.