Kathir News
Begin typing your search above and press return to search.

பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு 3 மடங்கு வென்டிலேட்டர்கள்: மத்திய சுகாதாரத்துறை தகவல்.!

கொரோனா நிதியாக பி.எம். கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்ட பணத்தில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 3 மடங்கு அதிகமாக வென்டிலேட்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு 3 மடங்கு வென்டிலேட்டர்கள்: மத்திய சுகாதாரத்துறை தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 May 2021 5:08 PM IST

கொரோனா நிதியாக பி.எம். கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்ட பணத்தில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 3 மடங்கு அதிகமாக வென்டிலேட்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையில், பி.எம். கேர்ஸ் பிரதமரால் துவங்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை அளித்தனர். அந்த நிதியில் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. தற்போது 3 மடங்குக்கும் அதிகமாக வென்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் சில மாநிலங்களில் வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், அதில் சில வென்டிலேட்டர்கள் சரியாக செயல்படவில்லை என்ற புகார்கள் வந்தது. அதனை சரி செய்து மீண்டும் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News