Kathir News
Begin typing your search above and press return to search.

PM CARES நிதியில் ஸ்ரீநகரில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை!

PM CARES நிதியில் ஸ்ரீநகரில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை!

ParthasarathyBy : Parthasarathy

  |  12 Jun 2021 9:27 AM GMT

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய "PM CARES" நிதி வழங்கும் திட்டம் மூலமாக இந்த கொரோனா காலத்தில் பல மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆகியவை இலவசமாக வழங்கபட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் "PM CARES" மூலமாக கிடைத்த நிதியை வைத்து ஸ்ரீநகரில் DRDO உருவாக்கப்பட்ட கோவிட் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இது குறித்து DRDO வெளியிட தகவலில் "PM CARES வழங்கிய நிதி மூலம் ஸ்ரீநகரில் உள்ள கொண்மோ பகுதில், 500 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையை வெறும் 17 நாட்களில் DRDO அவர்களால் உருவாக்கபட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் அடங்கிய 125 ICU படுக்கைகள் உள்ளது அதில் 25 படுக்கைகள் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் அனைத்து படுக்கைகளுக்கும் தடையில்லா ஆக்ஸிஜன் விநியோகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் வெயில் காலத்திற்கு ஏற்றார் போல் குளிரூட்ட பட்டிருக்கிறது மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்றார் போல் ஹீட்டர் வசதியும் செய்ய பட்டிருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தங்குவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. முறையான தீ வெளியேறும் பகுதி மற்றும் பார்க்கிங் வசதி ஆகிய அனைத்துமே சிறப்பாக உள்ளது.


இதில் Wi-Fi, CCTV வசதிகள் மற்றும் மருத்துவமனைக்கான உதவிபெறும் எண் ஆகிய அனைத்து வசதியும் உள்ளது. இந்த மருத்துவமனை ஜம்மு& காஷ்மீரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்புக்களை வழங்கும்." என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News