Kathir News
Begin typing your search above and press return to search.

8 ஆண்டுகளுக்கு முன்னரே போடப்பட்ட மாஸ்டர் பிளான் - பிரதமர் சொன்ன சீக்ரெட் என்ன?

8 ஆண்டுகளுக்கு முன்னரே போடப்பட்ட மாஸ்டர் பிளான் - பிரதமர் சொன்ன சீக்ரெட் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2022 1:36 AM GMT

பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளில் எத்தனால் கலப்புக்குப் பிறகு, தற்போது இயற்கை எரிவாயு குழாய்களில் பசுமை ஹைட்ரஜனை கலப்பதை நோக்கி நாடு நகர்ந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இது இயற்கை எரிவாயு மீதான இறக்குமதி சார்பைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மோசமான மின்நிலைமையை நினைவுகூர்ந்த பிரதமர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மின்துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றியமைக்க அரசாங்கம் முன்முயற்சி எடுத்ததை நினைவுபடுத்தினார். மின் அமைப்பை மேம்படுத்த உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் இணைப்பு ஆகிய நான்கு வெவ்வேறு பிரிவுகள் ஒன்றாகச் செயல்பட்டன.

கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே மின் உற்பத்தித் திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறியுள்ளது. முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சுற்று கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன. மேலும், சௌபாக்யா திட்டத்தின் கீழ் 3 கோடி இணைப்புகளை வழங்குவதன் மூலம், செறிவூட்டல் இலக்கை நெருங்கி உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என்று பிரதமர் கூறினார். இன்று நாம் இந்த இலக்கை நெருங்கிவிட்டோம். இதுவரை, புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து சுமார் 170 ஜிகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. இன்று, நிறுவப்பட்ட சூரிய சக்தியின் அடிப்படையில் உலகின் முதல் 4-5 நாடுகளில் இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.

உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பல இன்று இந்தியாவில் உள்ளன. நாட்டில் இன்று மேலும் இரண்டு பெரிய சூரியசக்தி ஆலைகள் கிடைத்துள்ளன. தெலுங்கானா மற்றும் கேரளாவில் கட்டப்பட்ட இந்த ஆலைகள் நாட்டிலேயே முதல் மற்றும் இரண்டாவது பெரிய மிதக்கும் சூரியசக்தி ஆலைகள் ஆகும். வீடுகளில் சூரியசக்தி தகடுகள் அமைக்க ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுடன், மின்சாரத்தை சேமிப்பதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் கூறினார். "மின்சாரத்தை சேமிப்பது என்பது எதிர்காலத்தை வளமாக்குவதாகும். பிரதமர் குசும் திட்டம் இதற்கு சிறந்த உதாரணம். விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்ப் வசதி செய்து தருகிறோம், வயல்களின் ஓரத்தில் சூரியசக்தி தகடுகள் அமைக்க உதவுகிறோம்,'' என்றார் அவர்.

நாட்டில் மின் நுகர்வு மற்றும் கட்டணங்களைக் குறைப்பதிலும் உஜாலா திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின்கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்படுகிறது என்றார்.

Input From: news on air

Next Story
கதிர் தொகுப்பு
Trending News