ட்ரோன்கள் முதல் தேஜஸ் ரக போர் விமானங்கள் தயாரிப்பு வரை இந்தியாவின் சாத்தியம்!
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
By : Bharathi Latha
கர்நாடகாவில் தும்கூரில் HAL எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல், தும்கூர் தொழிற்பேட்டை, திப்தூர் மற்றும் சிக்கநாயகனஹள்ளியில் 2 ஜல்ஜீவன் இயக்கத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் தொழிற்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட பிரதமர், இலகு ரக ஹெலிகாப்டரையும் திறந்துவைத்தார்.
பின்னர், அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, துறவிகள் மற்றும் முனிவர்களின் பிறப்பிடமாகத் திகழும் கர்நாடகா, ஆன்மீகம், அறிவாற்றல் மற்றும் அறிவியல் விழுமியங்களைக் கொண்ட இந்திய பாரம்பரியத்தை எப்போதும் பலப்படுத்தி வருகிறது என்றார். குறிப்பாக சிறப்பு வாய்ந்த தும்கூர் சித்தகங்கா மடம் ஆகியவற்றின் சிறப்பு அம்சங்களையும் பிரதமர் எடுத்துரைத்தார். உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றின் பாரம்பரியங்களை பாதுகாத்த புஜ்ய சிவக்குமார் சுவாமி, ஸ்ரீ சித்தலிங்க சுவாமியை முன்னெடுத்துச் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களின் எளிதான வாழ்க்கை முறை, ஆயுதப்படையினரை வலுப்படுத்துதல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கோடிகளுக்கும் மேற்பட்ட மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். கர்நாடக இளைஞர்களின் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் திறமையைப் பாராட்டிய பிரதமர் ட்ரோன்கள் முதல் தேஜஸ் ரக போர் விமானங்கள் தயாரிப்பு வரை உற்பத்தித்துறை வலுவடைவதாக அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News