பிரதமரின் கதிசக்தி திட்டத்தால் மின்சார தடை என்ற பேச்சுக்கே இடமில்லை - தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொண்டு வரப்படவுள்ள மாற்றம்!

By : Kathir Webdesk
கட்டமைப்பு வளர்ச்சிக்கான தேசிய பெருந்திட்டம்- பிரதமரின் கதி சக்தியை, அக்டோபர் 2021ல் பிரதமர் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப்போக்குவரத்து, எரிவாயு, மின்சாரம் எடுத்துச்செல்லுதல், புதுபிக்கத்தக்க எரிசக்தி போன்ற கட்டமைப்பு திட்டமிடலை ஒருங்கிணைந்த ஒற்றை தொலைநோக்கின் கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். இதுவரை இல்லாத இதுபோன்ற முன்முயற்சிகள் நாடு முழுவதும் கட்டமைப்பு வளர்ச்சியை, நாட்டின் எரிசக்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.
இந்தத் திட்டங்களில், 9 உயர் விளைவு மின் திட்டங்களை மத்திய மின்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகா, மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் மிகுந்த 6 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடிப்படைப் புள்ளி விவரங்களை உள்ளடக்கிய ஐஎஸ்டிஎஸ் மின்கடத்தி பாதைக்கு பிரத்யேக அடுக்கை உருவாக்குவதன் மூலம், இந்தத் திட்டங்களின் விவரங்கள், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
பிரதமரின் கதி சக்தி திட்டம் குறிக்கோளின்படி, ஒட்டுமொத்த "தற்போதைய" மாநிலங்களுக்கிடையே மின்சாரம் எடுத்துச்செல்லும் பாதை குறித்த நாடு முழுவதற்குமான தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தற்போது அமைக்கப்பட்டு வரும் மாநிலங்களுக்கிடையேயான மின்சாரம் எடுத்துச்செல்லும் பாதையின் 90% இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10% பாதை சம்பந்தப்பட்ட அமைப்பினரால் மின்சாரம் எடுத்துச்செல்லும் பாதை உறுதி செய்யப்பட்டவுடன் இணைக்கப்படும்.
பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்ட இணையதளம், பொருளாதார மண்டலங்களுக்கு தடையற்ற இணைப்பு வசதியை உருவாக்குவதற்கான கட்டமைப்பு திட்டமிடல் குறித்த பாதுகாப்பான, நீடித்த, அளவிடத்தக்க மற்றும் கூட்டு அணுகுமுறைகள், நாட்டின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவிகரமாக இருக்கும்.
Input From: business standard
