இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டு இது: மத்திய அமைச்சர் கூறியது எதை?
பிரதமரின் விரைவு சக்தி பெருந் திட்டம் பொதுமக்களுக்கு பெருமளவு உதவும் என் மத்திய அமைச்சர் தகவல்.
By : Bharathi Latha
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் மற்றும் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை இரண்டும் வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெருமளவு உதவும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இந்திய வர்த்தக சபையில் நடைபெற்ற விரைவு சக்தி பெருந்திட்டம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய அவர், விரைவு சக்தி பெருந்திட்டமும் சரக்குப் போக்குவரத்துக் கொள்கையும் நாட்டில் முதலீடுகளை அதிகரித்துப் போட்டித் தன்மையை மேம்படுத்தும் என்றார்.
புதுமைக் கண்டுபிடிப்புகளில் முன்னணி நாடாக இந்தியாவை உலகம் அங்கீகரித்துள்ளது என்று அவர் கூறினார். சிறந்த நிர்வாகம், மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துதல், வர்த்தகம் புரிதலை எளிமைப்படுத்துதல் போன்றவற்றிற்காக புதிய நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். UPI எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்திட்டம் இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இது நாட்டின் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 7.28 பில்லியன் என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தில் 1300 தகவல் அடுக்குகள் உள்ளதாகவும், காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், நதிகள், யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News