Kathir News
Begin typing your search above and press return to search.

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.2,000: வங்கிக்கணக்கில் நாளை செலுத்தப்படும்.!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் சார்பில் அடுத்த தவணையாக ரூ.2,000 மத்திய அரசு நாளை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.2,000: வங்கிக்கணக்கில் நாளை செலுத்தப்படும்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 May 2021 7:02 PM IST

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் சார்பில் அடுத்த தவணையாக ரூ.2,000 மத்திய அரசு நாளை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். மொத்தம் 19,000 கோடி ரூபாய் பணம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.





பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதுவரை 7 தவணையாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூ.6000 என்ற வீதம் ஒரு விவசாயிக்கு மத்திய அரசு நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை 7 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படுவது 8வது தவணையாகும்.





கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18000 கோடி பணம் அளிக்கப்பட்டது. இதனிடையே தற்போது இந்த ஆண்டிற்கான பணம் நாளை செலுத்தப்படுகிறது. இது பற்றி பிரதமர் மோடி நாளை உரையாடுகிறார் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News