PM கிசான் திட்டத்தின் 13வது தவணை தொகையாக ரூ. 16,800 கோடி: விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் மோடி!
PM கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக ரூ. 16,800 கோடியைக் பிரதமர் வழங்கி இருக்கிறார்.
By : Bharathi Latha
பிரதமரின் விவசாயி PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி இருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, PM கிசான் 13வது தவணை வெளியீட்டு நிகழ்வு, இந்திய ரயில்வே, ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்றது. இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலாளர் தமனோஜ் அஹுஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் PM கிசான் மற்றும் ஜல் ஜீவன் இயக்கப் பயனாளிகள் அடங்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12வது தவணை கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டது. 13 வது தவணை வெளியிடப்படுவதன் மூலம், இந்தியாவின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தங்களின் வாழ்வாதார இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுவதற்கும் அரசு தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. பி.எம் கிசான் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்துள்ளது.
இப்போதைய தவணை அவர்களின் வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்யும். விவசாயத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும். பிரதமர் நரேந்திர மோடி 2019ல் பிரதமரின் விவசாயிகளின் PM கிசான் திட்டத்தைத் தொடங்கினார். குறிப்பிட்ட சில விலக்குகளுக்கு உட்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாசன நில உரிமையாளர் குடும்பங்களுக்கும் வருமான ஆதரவு வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000, தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில், நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது வரை, 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு, முதன்மையாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar