பிரதமர் விவசாய நிதியுதவி மூலம் 12வது தவணை ரூ.2000 பெற இதை செய்ய கட்டாயம் வேண்டும்!
By : Thangavelu
பிரதமர் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 11வது தவணையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த மாதம் வழங்கப்பட்டது.
11வது தவணையில் மொத்தம் 10 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் கடந்த செவ்வாய்கிழமை மத்திய அரசு சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி தலைமை ஏற்று 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார். இதனால் ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.2000 செலுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 11 தவணை பணம் விவசாயிகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்ட நிலையில், இ.கே.ஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது.
இதற்கு முன்னர் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இ.கே.ஒய்.சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடு கடந்த மே 31ம் தேதி கடைசியாக இருந்தது. இதனை தற்போது மேலும் ஜூலை 31ம் தேதி வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த திட்டத்தின் பயன்பெறுபவர்கள் இ.கே.ஒய்.சி அப்டேட் செய்யாதவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் 12வது தவணை பணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
Source: News 18 Tamilnadu